மூடநம்பிக்கையாளர்கள் கட்டுக்கதைவாதிகள், வழிகேடர்களான சூஃபிகள் மற்றும் பித்அத்வாதிகள் வரும் நாட்களில், நபி ﷺ அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள். அவர்கள் இந்த ‘புர்தா‘ கவிதையை தங்கள் மவ்லித் கொண்டாட்டங்களில் திரும்பத் திரும்பப் பாடுவார்கள். அந்த புர்தா நூலில் உள்ளதை விட மோசமான வார்த்தைகளை பாடுவார்கள்.
புர்தாவை எழுதிய புஸய்ரிக்குப் பிறகும், நபிகள் ﷺ அவர்களைப் புகழ்வதில் இன்னும் அதிக வரம்பு மீறல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் நபிகளிடம் ﷺ சென்று,
“யா ரசூலல்லாஹ், எங்கள் பாவங்கள் பெருகிவிட்டன, உங்களிடமிருந்து மன்னிப்பை நாடுகிறோம்”.
“யா ரசூலல்லாஹ், எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள் யா ரசூலல்லாஹ்,” என்று முறையிடுகிறார்கள்.
இதேபோல (அவர்களின் கூட்டங்களில்), “அவரிடம் (நபியிடம்) தஞ்சமடையுங்கள், பின்னர் எழுந்து நில்லுங்கள் அல்லாஹ் அவர்களை புகழ்ந்து பேசுகிறான்” என்று கூறுகிறார்கள். இதன் மூலம் நபி ﷺ அங்கு நேரடியாக வந்துவிட்டதாக அவர்கள் நம்புகிறார்கள்.
கடினமான விஷயங்களில் எனக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பவரே, எனக்கு உதவி செய்யுங்கள்” என்று தங்கள் மவ்லித் கொண்டாட்டங்களில் கூறுகிறார்கள். புகழ்ந்து வரம்பு மீறுவதில் இதை விட ஓர் வரம்பு மீறுதல் எதுவுமில்லை. கிறிஸ்தவர்களிடம் காணப்பட்ட வரம்பு மீறுதலை விட மிகக்கடுமையான வரம்பு மீறுதல். கிறிஸ்தவர்களிடமிருந்து இவர்கள் வெறும் எதில் வேறுபடுகிறார்கள் என்றால், கிறிஸ்தவர்கள் “அல்லாஹ் மூவரில் ஒருவர்” அல்லது “ஈஸா மூவரில் ஒருவர்” என்று சொல்வது போல் இவர்கள் சொல்லாமல் இருக்கிறார்கள். இதைத் தவிர, கிறிஸ்தவர்கள் செய்த புகழ்ச்சியைவிட இவர்கள் செயவது கடுமையானது. கிறிஸ்தவர்கள் கண்ணியமிக்க இறைத்தூதர் ஈசா (அவர்களின் மீது அமைதி உண்டாகட்டுமாக) அவர்களைப் பற்றி கூறிய அதே விஷயம் (வரம்புமீறி புகழ்தல்) முஸ்லிம்களிடமும் நடைபெறுகிறது.
இதில் (வேடிக்கை என்னவென்றால்) புர்தாவை எழுதிய புஸய்ரீ கூட, முஸ்லிம்களை “ஈஸா அல்லாஹ்வின் மகன்” என்று கூறுவதை மட்டும் விட்டுவிடுங்கள், மற்றபடி எதைச் சொல்லி வேண்டுமானாலும் புகழ்ந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்! இது வரம்புமீறல். தனது ‘புர்தா’ கவிதையில் அவர் என்ன சொன்னார் தெரியுமா? “கிறிஸ்தவர்கள் தங்கள் நபியைப் (ஈஸா) பற்றி (வரம்புமீறி) கூறியதை விட்டுவிடுங்கள், (அதைத் தவிர்த்து) அவரைப் புகழ்வதில் நீங்கள் விரும்பியபடி செய்து, அவரிடம் நீங்கள் தீர்ப்பைக் கோருங்கள்.” அதாவது, நீ விரும்பியபடி வரம்பு மீறி புகழ்ந்துகொள். நீ விரும்பியபடி பேசு, ஆனால் “மூவரில் ஒருவர்” என்று சொல்லாதே. “முஹம்மது அல்லாஹ்வின் மகன்” அல்லது “அவர் வணங்கப்படுவர்” என்று சொல்லாதே! இதேபோல், பல கவிதைகள் உள்ளன. இந்தக் கொண்டாட்டங்களில் சொல்லப்படும் இறைமறுப்பு நிறைந்த கவிதைகளில் மிகவும் பிரபலமான ஒன்று, புரஇ கவிதைகள்.
அப்துர்ரஹீம் அல்-புர்இ ஒரு சூஃபி கவிஞர். அவர் செய்துள்ள ஷிர்க்குகள் (இணை வைத்தல்) மற்றும் குஃப்ருகளை (இறைமறுப்பு) எவ்வளவு என்பது அல்லாஹ் ஒருவனுக்கே தெரியும். அவர் சூடான் நாட்டைச் சேர்ந்தவர். கட்டுக்கதைவாதி, முடநம்பிக்கையாளர் அதுபோக (வழிகெட்ட) சூஃபிய்யாவின் சம்மானிய்யா தரீகாவைச் சேர்ந்தவர். ஆயினும், கிறிஸ்தவர்கள் கூறியதைவிட கடுமையான வார்த்தைகளை இவர்கள் போன்றோர் கூறியுள்ளனர்.
எங்கே இவர்கள் தவ்ஹீதை (ஏகத்துவத்தை)ப் படித்தார்கள்? அல்லாஹ்வின் மார்க்கத்தை எப்படிப் புரிந்துகொண்டார்கள்? அல்லாஹ்வின் வேதத்தில் தவ்ஹீதைப் பற்றிய வசனங்களைப் படிக்கும்போது, ஏகத்துவம் சார்ந்த கட்டளையும் அதை நிலைநாட்டவும், உயர்ந்த அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்றும், அவனுக்கு மட்டுமே மார்க்கத்தை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் கட்டளையிடும் வசனங்களை பரைசாற்றும் அல்லாஹ்வின் வேதத்தை படிக்கும்போது அவர்கள் எப்படி இவ்வாறு செய்கிறார்கள்? அல்லாஹ் இணை வைத்தவர்களைப் பற்றியும், அவர்களின் வணக்கங்களைப் பற்றியும் எப்படி எச்சரித்துள்ளான்? அவர்கள் அல்லாஹ்வுடன் (மற்றவர்களை அழைத்து வணங்கி) இணையார்களை ஏற்படுத்திக்கொண்டதாகவும், அவனது வணக்க உரிமையில் இணை வைத்ததாகவும் கூறியுள்ளானே? ஆனால், துக்கப்பட வேண்டியது என்னவென்றால்
உயர்ந்த அல்லாஹ் கூறியது போல
بَلْ قَالُوٓا۟ إِنَّا وَجَدْنَآ ءَابَآءَنَا عَلَىٰٓ أُمَّةٍۢ وَإِنَّا عَلَىٰٓ ءَاثَـٰرِهِم مُّهْتَدُونَ
“மாறாக, அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாம் எங்கள் மூதாதைகளை ஒரு கொள்கையில் கண்டோம். நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகள் மீதே வழி நடப்போம்”
ஸூரா அஸ்-ஸுக்ருஃப் (43:22)
இது “மனோஇச்சையும், சத்தியத்தைவிட்டும் சுன்னாவைவிட்டும் விலகிச் செல்வதாகும்.
(கவிதையில் சொல்வதுபோல்) சோதனை நாட்களில் ஒரு மனிதனை அது அழித்துவிடும், அதனால் அவன் அழகற்றதையும் அழகாகக் காண்பான்.
இந்த மெளவலத் கொண்டாட்டங்களில் பல கண்டிக்கத்தக்க விஷயங்கள் உள்ளன: பித்அத், ஷிர்க், வழிகேடு, பாட்டு, நடனம், ஆண்-பெண் கலப்பு, சூதாட்டம், மசூதிகளில் புனிதத்தை மீறுதல், அலங்காரம் செய்த பெண்களுடன் ஆண்கள் கலப்பது, மேளங்கள் மற்றும் இசைக்கருவிகளைப் பயன்படுத்துதல். இவை அனைத்தும் இந்த மவ்லத் கொண்டாட்டங்களில் நிகழ்கின்றன.
(இதை அனைத்தையும் செய்துவிட்டு) பின்னர், நாங்கள் நபி ﷺ அவர்களை நேசிக்கிறோம் என்று கூறுகிறார்கள்.
பொய்யர்களே! இது எந்த மாதிரியான அன்பு?
நபி ﷺ, அவரகளது சுன்னாவிலிருந்தும் மற்றும் அவர்களது அன்பிலிருந்தும் உங்களைவிட யாரும் அதிக தூரத்தில் இல்லை.
ஏனெனில், அன்பு என்பது பின்பற்றுவதன் மூலமே வெளிப்படும்
அல்லாஹ் சூரத்துல் ஆல-இம்ரானில் கூறுகிறான்:
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ ٱللَّهَ فَٱتَّبِعُونِى يُحْبِبْكُمُ ٱللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَٱللَّهُ غَفُورٌۭ رَّحِيمٌۭ
நபியே! நீர் கூறும்: ‘நீங்கள் (உண்மையிலேயே) அல்லாஹ்வின்மேல் அன்பு வைப்பீர்களாக இருந்தால், நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்கள்மீது அன்பு வைப்பான் மற்றும் உங்கள் பாவங்களை மன்னிப்பான்.’
(ஆல-இம்ரான் 3:31).
وفي الأيام القادمة، سيحتفل الخرافيون وأهل الضلال والصوفية وأهل البدع بمولد النبي عليه الصلاة والسلام. وسيرددون هذه البُردة في مواليدهم، وسيرددون أشد من هذا الكلام أيضاً.
قد ظهر بعد البوصيري فيه أيضاً من الغلو في رسول الله ﷺ. يأتون إلى رسول الله فيشتكون له: “يا رسول الله، كثُرت ذنوبنا، ونرجو العفو منك، يا رسول الله اشفع لنا يا رسول الله”.
وهكذا، “لوذوا به ثم قوموا”. فيعتقدون الحضرة وأن الرسول حاضر معهم.
“فأغثني يا ملاذي في مهمات الأمور”. هكذا يقولون في موالدهم. غلو ما بعده غلو، وإطراء شديد أشد من الإطراء الذي وقعت فيه النصارى، إلا أنهم لم يقولوا: “الله ثالث ثلاثة” أو “عيسى ثالث ثلاثة”.
فالدعوة التي عليها النصارى في النبي الكريم عيسى عليه السلام كذلك تحصل عند المسلمين. بل إن البوصيري نفسه طلب من المسلمين أن يتركوا هذا فقط، أن يقولوا: إن الله، أن يقولوا: إن عيسى ابن الله. ثم يقول ما شاء من الغلو. ماذا قال في بردته؟
“دع ما ادعته النصارى في نبيهم، واحكم بما شئت مدحاً فيه واحتكمِ”.
يعني: قل ما شئت من الغلو، قل ما شئت من القول، لكن لا تقل: “ثالث ثلاثة”، لا تقل: “ابن الله محمد” أو “إنه إله”.
وهكذا أيضاً قصائد كثيرة جداً، ومن أشهر القصائد التي فيها هذه الكفريات وتقال أيضاً في الموالد: قصائد البرعي.
عبد الرحيم البرعي شاعر متصوف عنده من الشركيات والكفريات والله به عليم، وهو سوداني الجنسية، خرافي، صاحب الطريقة السمانية. ومع ذلك، قد قالوا قولاً أشد من القول الذي ادعته النصارى.
وكيف فهموا دين الله؟ وكيف يفعلون عندما يقرأون النصوص في كتاب الله تأمر بالتوحيد وإقامة عبادة الله جل وعلا، جل في علاه، وإخلاص الدين له سبحانه؟
وكيف أن الله سبحانه وتعالى حذّر من المشركين ومن عباداتهم، وأنهم اتخذوا مع الله أنداداً وأشركوا في ألوهيته؟
لكن للأسف، كما قال الله: “بل قالوا إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مهتدون”. الهوى والإعراض عن الحق وعن السنة، يقضي على المرء في أيام محنته، حتى يرى حسناً ما ليس بالحسن.
هذه الموالد فيها من المنكرات: البدع والشركيات والضلال والغناء والرقص والاختلاط والقمار وانتهاك الحرمات في المساجد، واختلاط الرجال بالنساء المتبرجات، واستعمال الطبول وآلات الطرب. كل ذلك يحصل في هذه الموالد.
ثم يقولون: “نحن نحب النبي صلى الله عليه وسلم”.
أي محبة هذه أيها الكذبة؟ لا يوجد أحد أشد بُعداً عن النبي صلى الله عليه وسلم وعن سنته وعن محبته منكم؛ لأن المحبة إنما تكون بالاتباع: “قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم”.
Leave a Comment